ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

கம்பீர் செய்வது சரியில்லை..! முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் விமர்சனம்!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் முடிவுகளை முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் விமர்சித்துள்ளார்.

கௌதம் கம்பீர்

Published On :

முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் முடிவுகளை விமர்சித்து பேசியுள்ளார்.

இந்திய அணி தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து வந்தன. தற்போது இங்கிலாந்துடன் டி20 தொடரையும் ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது.

கடைசி ஒருநாள் போட்டியில் 44.3 ஓவர்களில் இந்திய அணி 308 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் ரோஹித் சதமடித்து அசத்தினார். நம்.5இல் அக்‌ஷர் படேல் களமிறங்கி 41* ரன்கள் எடுத்தார்.

கே.எல்.ராகுலை 5ஆவது இடத்தில் களமிறக்காமல் 6ஆவது 7ஆவது இடங்களில் களமிறக்குவதை சரியான முடிவல்ல என ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

தனது சீக்கி சீக்கா யூடியூப் சேனலில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியதாவது:

ஸ்ரேயாஷ் ஐயர் நல்ல ஃபார்மில் இருப்பது இந்தியாவுக்கு நல்ல விஷயம். ஆனால், நான் கே.எல்.ராகுலுக்காக வருத்தப்படுகிறேன். அக்‌ஷர் படேல் நன்றாக விளையாடுகிறார். ஆனால், கே.எல்.ராகுலை மாற்றி களமிறங்குவது நல்லதல்ல. ராகுல் நம்.5இல் சிறப்பாக விளையாடியுள்ளார். அதைத் தவிர்ந்த்து 6,7ஆவது இடங்களில் களமிறக்கும்போது குறைவான ரன்களில் ஆட்டமிழக்கிறார். அது சரியான முடிவல்ல.

டாப் ஆர்டர் பேட்டர்கள் நன்றாக விளையாடுவதால் இப்படி மாற்றினாலும் பிரச்னை இல்லை. ஒருநாள் தொடக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழக்கும்போது கடினமான சூழ்நிலை உருவாகும். அப்போதுதான் இதன் பிரச்னை தெரியவரும்.

நீண்டநாள் செயல்திட்டத்துக்கு இது உதவாது. அதுதான் என்னை கவலை அளிக்கச் செய்கிறது எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.