ரஞ்சி டிராபி அரையிறுதி: மும்பை அணியில் மீண்டும் ஜெய்ஸ்வால்!

ரஞ்சி டிராபி அரையிறுதிக்கான மும்பை அணியில் மீண்டும் ஜெய்ஸ்வால்..
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
Published on
Updated on
1 min read

ரஞ்சி டிராபிக்கான மும்பை அணியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை அணி அரையிறுதியில் விளையாடவிருக்கும் வேளையில் ஜெய்ஸ்வாலின் வருகை மும்பை அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. 90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரின் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்களின் முடிவில் குஜராத் - கேரளா, மும்பை - விதர்பா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கின்றன.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் 160 ரன்கள் விளாசிய ஜெய்ஸ்வால், மொத்தமாக 391 ரன்கள் குவித்தார்.

இதையும் படிக்க...3 பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி அபராதம்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான முதல்கட்ட அணித் தேர்வில் இடம்பிடித்திருந்த ஜெய்ஸ்வால், கடைசி நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டதை அடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், இங்கிலாந்துக்கு எதிரான ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி அவரால் சரியாக சோபிக்க முடியவில்லை.

அரையிறுதி ஆட்டங்கள் வருகிற 17 ஆம் தேதி தொடங்கும் நிலையில், குஜராத் - கேரளம் இடையிலான போட்டி அகமதாபாத்திலும், மும்பை - விதர்பா இடையிலான அரையிறுதி போட்டி நாக்பூரிலும் நடக்கவிருக்கிறது.

மும்பை அணி விவரம்

அஜிங்யா ரகானே (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, அமோக் பட்கல், சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சித்தேஷ் லாட், ஷிவம் துபே, ஆகாஷ் ஆனந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் தாமோர், ஷர்துல் தாக்கூர், ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோட்யன், மொஹித் அவஸ்தி, சில்வெஸ்டர் டிசோசா, ராய்ஸ்டன் டயஸ், அதர்வா அன்கோலேகர், ஹர்ஷ் தன்னா, சூர்யன்ஷ் ஷெட்ஜே.

இதையும் படிக்க... ஆதரவும் எதிர்ப்பும்..! லபுஷேன் தொடர்ந்து விளையாடுவாரா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com