
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் விளையாடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ரௌஃபுக்கு முத்தரப்பு தொடரின்போது காயம் ஏற்பட்டது. இதனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில், ஹாரிஸ் ரௌஃப் காயத்திலிருந்து குணமடைந்து விட்டதாகவும், சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் விளையாடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்ததாவது: முத்தரப்புத் தொடரின் முதல் போட்டியில் ஹாரிஸ் ரௌஃபுக்கு காயம் ஏற்பட்ட பிறகு, அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர் தற்போது நன்றாக இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் அவர் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணிக்காக 46 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஹாரிஸ் ரௌஃப் 83 விக்கெட்டுக்ளைக் கைப்பற்றியுள்ளார். 79 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 110 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
முத்தரப்புத் தொடரில் நியூசிலாந்திடம் இரண்டு முறை தோல்வியடைந்த பாகிஸ்தான், மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.