
விராட் கோலி உலகத் தரத்திலான வீரர் எனவும், எந்த பந்துவீச்சாளருக்கும் சவாலளிக்கக் கூடியவர் எனவும் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான், நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி நாளை மறுநாள் (பிப்ரவரி 20) தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது.
உலக தரத்திலான வீரர்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி உலகத் தரத்திலான வீரர் எனவும், எந்த பந்துவீச்சாளருக்கும் சவாலளிக்கக் கூடியவர் எனவும் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகத் தரத்திலான பேட்டிங்கின் மூலம் எந்த ஒரு பந்துவீச்சாளருக்கு எதிராகவும் விராட் கோலி சவலாளிக்கக் கூடியவர். எந்த ஒரு பந்துவீச்சாளர் எனக் கூறும்போது, அதில் நானும் இருக்கிறேன். அவருக்கு எதிரான சவாலை நான் விரும்புகிறேன். இந்தியாவுக்கு எதிராக துபையில் விளையாடவுள்ள போட்டியில் நிறைய சவால்கள் நிறைந்திருக்கும். அதில் சிறந்த விஷயம் என்னவென்றால், விராட் கோலிக்கு எதிராக பந்துவீசும்போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்றார்.
காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஹாரிஸ் ரௌஃப், நியூசிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறும் முதல் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.