
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் அணி மிக மோசமாக ஃபீல்டிங் செய்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரிஸ்வான் பந்துவீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி 321 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் மிக மோசமாக ஃபீல்டிங் செய்தது இணையத்தில் கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது.
மேலும், பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் கோபம் அடைந்தார். பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் தனது ஓவரில் கேட்ச் விட்ட சக வீரர்களை குறித்து புலம்பும் காட்சிகள் இணையத்தில் கவனம் ஈர்த்தன.
பந்துவீச்சு, பேட்டிங்கில் திறமை வாய்ந்த பாகிஸ்தான் அணிக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை ஃபீல்டிங்தான். ஃபிட்னஸ் சரியில்லாத காரணத்தினால் பல கோப்பைகளை வெல்ல முடியாமல் இருந்துள்ளனர்.
இணையத்தில் சிலர் பாகிஸ்தானின் ஃபீல்டிங்கை ‘நெவர் எண்டிங் லவ் ஸ்டோரி’ என கிண்டல் அடித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் அணியினர் சரியாக ஃபீல்டிங் செய்து, கேட்ச்சை சரியாக பிடித்திருந்தால் நியூசிலாந்தை 250 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்கலாம் என வர்ணனையாளர்கள் கூறியதும் கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.