இப்ரஹிம் ஸத்ரான்
இப்ரஹிம் ஸத்ரான் AP

ஆப்கன் அதிரடி பேட்டிங்..! இங்கிலாந்துக்கு 326 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 325 ரன்கள் எடுத்துள்ளது.
Published on

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 325 ரன்கள் எடுத்தது.

அதிரடியாக விளையாடிய இப்ரஹிம் ஸத்ரான் 177 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கும்.

அடுத்தாக நபி, ஓமர்சாய், ஷாகிதி மூவரும் 40 ரன்கள் அதிரடியாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்கள்.

இங்கிலாந்து சார்பில் ஆர்ச்சர் 3, லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.

ஆப்கானிஸ்தான் ஸ்கோர் கார்டு

ரஹ்மானுல்லா குர்பாஸ் - 6

இப்ரஹிம் ஸத்ரான் - 177

செடிக்குல்லாஹ் அடல் - 4

ரஹ்மத் ஷா - 4

ஹஷ்மதுல்லா ஷாகிதி - 40

ஓமர்சாய் - 41

முகமது நபி - 40

குல்பதீன் நைப் - 1

ரஷித் கான் -1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com