ஜோ ரூட் அழுகை,வெற்றிக் களிப்பில் ஆப்கானிஸ்தான் வீரர்கள்.
ஜோ ரூட் அழுகை,வெற்றிக் களிப்பில் ஆப்கானிஸ்தான் வீரர்கள்.படங்கள்: எக்ஸ் / ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

கண்ணீருடன் இங்கிலாந்து வீரர்கள்..! வெற்றிக் களிப்பில் ஆப்கானிஸ்தான்!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான்.
Published on

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

முதலில் ஆப்கானிஸ்தான் 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து 49.5 ஓவா்களில் 317 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் தன்னை அரையிறுதிக்கான பந்தயத்தில் தக்கவைத்துக்கொள்ள, இங்கிலாந்து போட்டியிலிருந்து வெளியேறி அதிா்ச்சி கண்டது.

இந்தப் போட்டியில் சதமடித்த ஜோ ரூட் தோல்விக்குப் பிறகு அழுதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்து வீரர்கள் சோகத்தில் மூழ்கியிருக்க ஆப்கானிஸ்தான் வீரர்கள் வெற்றிக் களிப்பில் கொண்டாடினர்.

ஆப்கன் வீரர்கள் மட்டுமல்லாமல் அந்நாட்டு மக்களும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் போட்டியில் 177 ரன்கள் குவித்த இப்ராஹிம் ஜத்ரான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு கிரிக்கெட் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com