ஆஸி.யின் போராட்டத்துக்கு சிட்னியில் பலன் கிடைக்கும்..! அலெக்ஸ் கேரி நம்பிக்கை!

ஆஸி. வீரர் அலெக்ஸ் கேரி சிட்னியில் இந்தியாவை வென்று டபிள்யூடிசியில் முன்னேறுவோம் எனக் கூறியுள்ளார்.
அலெக்ஸ் கேரி
அலெக்ஸ் கேரிபடம்: ஏபி
Published on
Updated on
1 min read

2025ஆம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தென்னாப்பிரிக்கா தேர்வாகியுள்ளது.

மெல்போர்னில் நடைபெற்ற 4ஆவது பார்டர் - கவாஸ்கர் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

மீதமுள்ள 3 போட்டிகளில் ஒரு போட்டிகளில் ஆஸி. வென்றால் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். மாறாக இந்திய அணிக்கான வாய்ப்புகள் மங்கிவிட்டன.

பார்டர் - கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியின் ஜன.3ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இது குறித்து ஆஸி. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கூறியதாவது:

24 மாதங்களின் ஒழுக்கத்துக்கு பலன்

கடந்த 24 மாதங்களாக ஆஸ்திரேலியாவின் திடமான கிரிக்கெட்டுக்கு பலனாக சிட்னியில் வெற்றிபெறும். அதிகமான அனுபவம் வாய்ந்த வீரர்கள், திறமையான லெஜெண்ட்டுகள் அடங்கியிருக்கும் ஆஸி. அணி தொடர்ச்சியாக நன்றாக விளையாடி ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்கள். ஆனால், ஓரளவுக்குமேல் அதிகமாக எதிர்பார்க்கக்கூடாது.

இந்திய அணி கம்பேக் கொடுக்கும் வல்லமை வாய்ந்தது. அதனால் நாங்கள் தலையை குணிந்து அடுத்த போட்டியில் வெற்றி பெருவதற்கான வாய்ப்பை நோக்கியுள்ளோம். பிஜிடி கோப்பையை வெலன்றால் நன்றாக இருக்கும்.

ஸ்டார்க் விளையாடுவாரா?

ஸ்டார்க் நன்றாக இருக்கிறார். நிறைய ஆண்டுகள் நான் ஸ்டார்க் உடன் விளையாடி இருக்கிறேன். அவரைப் போல வலுவான கிரிக்கெட்டரை நான் பார்த்ததில்லை. அவருக்கு வலியினால் முகம் சுழிக்குமாறு இருந்தாலும் அவரால் விளையாட முடியும்.

மிட்செல் மார்ஷ் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சுமாரான செயல்பாடுகளையே அளித்து வருகிறார். ஆல்-ரவுண்டராக அவர் ஃபீல்டிங்கில் மட்டுமே இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

5ஆவது போட்டியில் அவர் அணியிலிருந்து நீக்கப்படுவாரா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு அலெக்ஸ் கேரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மிட்செல் மார்ஷ் கம்பேக் தருவாரா?

எப்போதாவது ஒருவர் மீது குறைகூற முற்பட்டால் ஆஸி. வீரர்களாகிய நாங்கள் எவ்வளவு நன்றாக விளையாடுவோம் என்று உலகத்திற்கு காட்டுவோம். அதனால், இது மிட்செல் மார்ஷுக்கான நேரம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com