வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதி
/

வெற்றி பெறும் எண்ணத்தில் மாற்றமில்லை: பாட் கம்மின்ஸ்

இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் எண்ணத்தில் மாற்றமில்லை.

News image

பாட் கம்மின்ஸ் (கோப்புப் படம்)

Updated On :2 ஜனவரி 2025, 4:06 pm IST

இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் எண்ணத்தில் மாற்றமில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் நாளை (ஜனவரி 3) தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ஆட்டத்தின் தீவிரத்தில் மாற்றமிருக்காது

ஆஸ்திரேலிய அணி 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ள நிலையில், சிட்னியில் நடைபெறும் கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி போட்டியின் தீவிரத்தன்மையை குறையவிடாது என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் முன்னிலையில் உள்ளது. ஆனால், ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடனே விளையாடுகிறோம். அதனால், சிட்னியில் நடைபெறும் கடைசிப் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்திலும், போட்டியின் தீவிரத்தன்மையிலும் எந்த ஒரு மாற்றமும் இருக்காது.

சில நேரங்களில் நாங்கள் அதிக ரன்கள் குவிப்பதை விரும்புகிறோம். மெல்போர்னில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் 400 - 500 ரன்கள் முன்னிலை பெற வேண்டும் என விரும்பினோம். அந்தப் போட்டியில் நாங்கள் நல்ல முன்னிலை பெறும் இடத்தில் இருந்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த முன்னிலையைப் பெறவில்லை. அதுதான் டெஸ்ட் கிரிக்கெட் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.