வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

நியூசி.க்கு எதிராக இங்கிலாந்து அபார வெற்றி; மீண்டும் எழுச்சி பெறுகிறதா பேஸ்பால் யுக்தி?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள் - படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :7 ஜூன் 2026, 7:58 pm IST

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து, நியூசிலாந்து அணி 113 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலை பெற்றது.

27 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணி 253 ரன்கள் முன்னிலை பெற நியூசிலாந்துக்கு 254 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக எமிலியோ கே 57 ரன்கள் எடுத்தார். ஜேமி ஸ்மித் 39 ரன்கள், பென் டக்கெட் 33 ரன்கள், ஆலி ராபின்சன் 29 ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் நாதன் ஸ்மித் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வில்லியம் ஓ’ரூர்க் இரண்டு விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் மற்றும் மாட் ஹென்றி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அபார வெற்றி!

254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி, 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணியில் கிளன் பிலிப்ஸ் 44* ரன்களும், டெவான் கான்வே 41 ரன்களும் எடுத்தனர். கேன் வில்லியம்சன் 18 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஆலி ராபின்சன் மற்றும் ஜோஷ் டங் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆலி ராபின்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

பேஸ்பால் யுக்தியால் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்த இங்கிலாந்து அணி, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

England has achieved a magnificent victory by 115 runs in the first Test match against New Zealand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.