எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

தோல்வியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற பென் ஸ்டோக்ஸ்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image

பென் ஸ்டோக்ஸ் - படம் | AP

Updated On :29 ஜூன் 2026, 8:40 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிரண்ட் பிரிட்ஜில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்களும், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 354 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து, 84 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி 288 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணிக்கு 373 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், நியூசிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இங்கிலாந்து அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 60 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, பென் டக்கெட் 36 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 30 ரன்களும் எடுத்தனர். ஹாரி ப்ரூக் 21 ரன்கள், கஸ் அட்கின்சன் 19 ரன்கள், ஜோ ரூட் 18 ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் ஸகாரி ஃபோல்க்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நாதன் ஸ்மித் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பென் சியர்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

டேரில் மிட்செல் ஆட்ட நாயகனாகவும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நாதன் ஸ்மித் இருவரும் தொடர் நாயகன்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இங்கிலாந்து அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (ஜூன் 28) அறிவித்தார். அவரது கடைசி சர்வதேசப் போட்டியில் தோல்வியுடன் விடைபெற்றுள்ளார்.

Summary

New Zealand achieved a magnificent victory by a margin of 160 runs in the third Test match against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.