/

பென் ஸ்டோக்ஸ் இல்லாத இங்கிலாந்து அணியை நினைத்துப் பார்க்க முடியவில்லை: ஜோஃப்ரா ஆர்ச்சர்

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறித்து வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பேசியுள்ளார்.

News image

ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ். - படம் | AP

Updated On :30 ஜூன் 2026, 5:59 pm IST

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறித்து வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பேசியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது. கடைசி டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் குறித்து சக வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பேசியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் ஓய்வு முடிவு குறித்து அவர் பேசியதாவது: பென் ஸ்டோக்ஸ் வெறும் கேப்டன் மட்டும் கிடையாது, நல்ல நண்பர். களத்தில் ஏதேனும் யோசனைகள் தேவைப்பட்டால், அவரிடம் சென்று யோசனைகளைப் பெறுவேன். இங்கிலாந்து அணியில் அவர் இனி விளையாடமாட்டார் என்பது மிகப் பெரிய இழப்பு. அவரை நாங்கள் பெரிய அளவில் மிஸ் செய்வோம். பென் ஸ்டோக்ஸ் இல்லாத இங்கிலாந்து அணியை கற்பனை செய்து பார்க்கவே கடினமாக இருக்கிறது.

நான் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் இருவரும் அணியில் இருந்துள்ளனர். ஆனால், தற்போது பென் ஸ்டோக்ஸ் இருக்கமாட்டார். அவர் இல்லாமல் விளையாடுவதை பழகிக் கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு தெரிவு எதுவும் இல்லை என்றார்.

Summary

Fast bowler Jofra Archer has spoken about England captain Ben Stokes' retirement from international cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.