முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கீமர் ரோச் புதிய சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கீமர் ரோச் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

News image

கீமர் ரோச் - படம் | மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :30 ஜூன் 2026, 4:34 pm IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கீமர் ரோச் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 217 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கீமர் ரோச் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவர் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இந்த டெஸ்ட்டில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஐந்தாவது மேற்கிந்தியத் தீவுகள் வீரர் என்ற சாதனையை கீமர் ரோச் படைத்துள்ளார். இதுவரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 89 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய 41-வது வீரர் கீமர் ரோச் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

West Indies cricketer Kemar Roach has set a new record in Test cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.