பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி முழுமையாகக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் அணியில் முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடி சதம் விளாசிய ஷான் மசூத் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.
இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றுவதுடன், சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது ராஸ்டன் சேஸ் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி. சொந்த மண்ணில் எங்களை வெல்வது மிகவும் கடினம் என்ற நிலையை உருவாக்குவோம் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ராஸ்டன் சேஸும் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தவரிசையில் முன்னற்றம் அடைவதற்கு இரண்டு அணிகளுக்கும் இந்தப் போட்டி முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Expectations have arisen as to whether the West Indies team will make a clean sweep of the Test series against Pakistan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடைசிவரை ஆட்டமிழக்காத பாபர் அசாம்..! 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள்!

முதல் டெஸ்ட்: காவெம் ஹாட்ஜ் அரைசதம்; மே.இ.தீவுகள் நிதான ஆட்டம்!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு!

23 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற மே.இ.தீவுகள்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




