தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

அறிமுகப் போட்டியில் மானவ் சுதர் அசத்தல்; ஆப்கானிஸ்தான் தடுமாற்றம்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் - படம் | AP

Updated On :7 ஜூன் 2026, 5:23 pm IST

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று (ஜூன் 6) நியூ சண்டீகரில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 564 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 126 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கே.எல்.ராகுல் 100 ரன்கள், சாய் சுதர்சன் மற்றும் ரிஷப் பந்த் தலா 81 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 52 ரன்கள் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது சலீம் சஃபி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரஹ்மான் ஷரிஃபி மற்றும் ஹஸ்மதுல்லா ஷகிதி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

மானவ் சுதர் அசத்தல்; ஆப்கானிஸ்தான் தடுமாற்றம்!

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 564 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, ஆப்கானிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் ரஹ்மத் ஷா அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களான அப்துல் மாலிக் 16 ரன்களும், செதிக்குல்லா அடல் 17 ரன்களும் எடுத்தனர். ரஹ்மனுல்லா குர்பாஸ் 12 ரன்கள், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி 20 ரன்கள், அஃப்சார் ஸஸாய் 3 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் அறிமுக வீரரான மானவ் சுதர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிரசித் கிருஷ்ணா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவைக் காட்டிலும் 451 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Afghanistan is struggling and losing wickets in the first innings of the Test match against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.