முதல் பந்திலிருந்து ஆஸி.யை திணறடித்த ரிஷப் பந்த்; சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!

சிட்னி டெஸ்ட் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்படம் | சச்சின் டெண்டுல்கர் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

சிட்னி டெஸ்ட் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 4 ரன்கள் முன்னிலை பெற்றது.

4 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் 33 பந்துகளில் 61 ரன்கள் (6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) குவித்தார்.

சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

சவாலான ஆடுகளத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த்தினை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

ரிஷப் பந்த்தின் அதிரடி ஆட்டம் பற்றி சச்சின் டெண்டுல்கர் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: சவாலான ஆடுகளத்தில் மற்ற பேட்ஸ்மேன்கள் 50 அல்லது அதற்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய நிலையில், ரிஷப் பந்த் அதிரடியாக 184 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியது உண்மையில் பிரம்மிப்பாக இருக்கிறது. அவர் முதல் பந்திலிருந்தே ஆஸ்திரேலிய அணியை திணறடித்தார். அவர் பேட் செய்வதை பார்ப்பது எப்போதும் மகிழ்ச்சியளிக்கிறது. என்ன ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அதிரடியான ஆட்டம் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.