இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து விலகும் பும்ரா?

இங்கிலாந்து உடனான தொடரிலிருந்து இந்திய வீரர் பும்ரா விலகுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்பிரீத் பும்ரா (கோப்புப் படம்)
ஜஸ்பிரீத் பும்ரா (கோப்புப் படம்)படம் | ஐசிசி
Published on
Updated on
1 min read

இங்கிலாந்து உடனான தொடரிலிருந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விலகுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகு தசைப் பிடிப்பு காரணமாக பார்டர்- கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ராவினால் பந்துவீச முடியவில்லை. அதனால் இந்திய அணி மோசமாக தோல்வியுற்றது.

3-1 என ஆஸி. அணி கோப்பையை வென்றது. இருப்பினும் 32 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா தொடர் நாயகன் விருது பெற்றார்.

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து உடனான வெள்ளைப் பந்து கிரிக்கெட் (ஒருநாள், டி20) போட்டியில் விளையாடவிருக்கிறது.

இருதரப்பு தொடரைவிட சாம்பியன்ஸ் டிராபி முக்கியம்

5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் விளையாட இங்கிலாந்து அணி இந்தியா வரவிருக்கிறது. முதல் போட்டி ஜன.22இல் தொடங்குகிறது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்காக பும்ரா இங்கிலாந்து தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ கவனம் செலுத்தி வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பிப்.19ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பிப்.20ஆம் தேதி இந்திய அணி வங்கதேசத்துடன் மோதுகிறது.

30 வயதாகும் பும்ரா பிஜிடி தொடரில் 150 ஓவர்களுக்கும் அதிகமாக பந்து வீசியுள்ளார். வேலைப்பழு அதிகமானதாலயே அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதென வர்ணனையாளர்கள் கூறினார்கள்.

பும்ராவின் காயம் எப்படி இருக்கிறதென இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பும்ராவின் நிலைமை என்ன?

கிரேட் 1 காயம் எனில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 வாரங்கள் தேவைப்படும். கிரேடு 2 காயம் எனில் அது குணமாக 6 வாரங்களும் கிரேடு 3 எனில் குறைந்தபட்சம் 3 மாதங்கள் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டி20 தொடரில் பும்ரா விளையாடமாட்டார். ஏனெனில் இந்த வருடம் டி20 உலகக் கோப்பை இல்லை. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி இருப்பதால் இங்கிலாந்துடனன 3இல் 2 ஒருநாள் போட்டிகளாவது பும்ரா விளையாட வேண்டும்.

பும்ராவின் காயம் எந்த கிரேடில் இருப்பதென கண்டறிந்த பிறகுதான் அவர் இங்கிலாந்து உடனான தொடரில் பங்கேற்பது உறுதி செய்யப்படும். பிப்.12ஆம் தேதி கடைசி ஒருநாள் போட்டியிலாவது பும்ரா விளையாடுவாரா என அவரது உடல்நிலை பரிசோதைக்குப் பிறகே தெரியவருமென பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.