நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு சிறந்த ஆண்டாக மாற வேண்டும்: ஸ்மிருதி மந்தனா

ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டு இந்தியாவுக்கு சிறந்த ஆண்டாக மாற வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனா - படம் | பிசிசிஐ

Published On :16 ஜனவரி 2025, 5:50 pm IST

ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டு இந்தியாவுக்கு சிறந்த ஆண்டாக மாற வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. முன்னதாக, சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஸ்மிருதி மந்தனா கூறுவதென்ன?

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான தொடர்ச்சியான ஒருநாள் தொடர் வெற்றிகள் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட உதவும் என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் அவர் கூறியதாவது: உலகக் கோப்பை நடைபெறவுள்ள ஆண்டில் தொடர்ச்சியாக்க இரண்டு ஒருநாள் தொடர்களை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது உண்மையில் சிறப்பானது. ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டு முழுவதையும் இந்திய அணி சிறந்த ஆண்டாக மாற்றி வெற்றி பெற வேண்டும் என்றார்.

அயர்லாந்துக்கு எதிராக நேற்று (ஜனவரி 15) நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 135 ரன்களும், பிரதிகா ராவல் 154 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.