ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை உறுதிப்படுத்திய ரோஹித் சர்மா!

ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.
ரோஹித் சர்மா
ரோஹித் சர்மாபடம் | AP
Published on
Updated on
1 min read

ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 18) அறிவித்துள்ளது. அணியை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கேப்டன் ரோஹித் சர்மாவிடம் ரஞ்சி கோப்பையில் விளையாடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

ரஞ்சி போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா

ரஞ்சி கோப்பையில் ஜம்மு - காஷ்மீருக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வருகிற ஜனவரி 23 ஆம் தேதி விளையாடவுள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு எதிரான இந்தப் போட்டியில் விளையாடவுள்ளதை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: கடந்த 6-7 ஆண்டுகளாக இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய அட்டவணையைப் பாருங்கள். கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, நாங்கள் 45 நாள்கள் வீட்டில் இருப்பதில்லை. ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு, நேரம் கிடைக்கும். ஆனால், அப்போது உள்ளூர் போட்டிகள் நடைபெறுவதில்லை. நமது உள்ளூர் போட்டிகள் அக்டோபரில் தொடங்கி மார்ச்சில் நிறைவடைகிறது.

இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடாத வீரர்கள், உள்ளூர் போட்டிகள் நடைபெறும்போது அதில் பங்குபெற்று விளையாடலாம். கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக டெஸ்ட் தொடர்களில் இடம்பெற்று விளையாடி வருகிறேன். அப்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு நேரம் கிடைப்பது மிகவும் அரிது. சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடும்போது, உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள சிறிது ஓய்வு தேவைப்படும். யாரும் உள்ளூர் போட்டிகளை விளையாடக் கூடாது என நினைப்பதில்லை. அதனைக் குறைத்து மதிப்பிடுவதும் இல்லை என்றார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், ரோஹித் சர்மா ஜம்மு - காஷ்மீருக்கு எதிரான ரஞ்சி போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com