இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பெத் மூனியின் அதிரடியான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று (ஜனவரி 20) சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா முதலில் விளையாடியது.
பெத் மூனி அதிரடி
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக பெத் மூனி மற்றும் ஜியார்ஜியா இருவரும் களமிறங்கினர். இந்த இணை ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், ஜியார்ஜியா 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், பெத் மூனியுடன் ஜோடி சேர்ந்த ஃபோப் லிட்ச்ஃபீல்டு சிறிது நேரம் களத்தில் நீடித்தார். அவர் 20 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத் மூனி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 51 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும்.
பெத் மூனியுடன் இணைந்து விளையாடிய கேப்டன் தஹிலா மெக்ராத் அதிரடியாக 9 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து தரப்பில் லாரென் பெல், சோஃபி எக்கல்ஸ்டோன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஃப்ரேயா கெம்ப் மற்றும் சார்லி டீன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இலங்கை அணி!

ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி!

பென் டக்கெட் சதம் விளாசல்: இந்தியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!

2-வது டி20: அபிஷேக் சர்மா அசத்தல்; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



