இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 23) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடியது.
ஆஸ்திரேலியா - 185/5
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் தஹிலா மெக்ராத் 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, பெத் மூனி 44 ரன்களும், கிரேஸ் ஹாரிஸ் 35 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: தோல்விக்கு காரணம் என்ன? விளக்கமளித்த ஜோஸ் பட்லர்!
இங்கிலாந்து தரப்பில் சார்லி டீன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஃபிரெயா கெம்ப் மற்றும் சோஃபி எக்கல்ஸ்டோன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியா வெற்றி
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீராங்கனையான மையா பௌச்சியர் 13 ரன்களில் ஆட்டமிழக்க, டேனியல்லே மற்றும் சோஃபியா டங்க்லி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. டேனியல்லே 40 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தும், சோஃபியா டங்க்லி 32 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் இடையிடையே மழை குறுக்கிட்டது. இதனால், போட்டி நடத்தப்படுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.
மழை நின்றவுடன் போட்டி தொடங்கியது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 43 ரன்கள் (6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்) எடுத்து களத்தில் இருந்தார். அப்போது, மீண்டும் மழை குறுக்கிடவே போட்டி மீண்டும் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தஹிலா மெக்ராத்துக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், ஆஷஸ் தொடரையும் வென்றது.
ஆஷஸ் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி, 3-0 என முழுமையாக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி!

ஆஷஸ் தொடரை இந்தியாவில் நடத்த திட்டமிடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்?

பென் டக்கெட் சதம் விளாசல்: இந்தியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!

வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



