இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்படுவாரா? முன்னாள் வீரர் பதில்!

இந்திய அணியின் நீண்ட கால கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து முன்னாள் வீரர் பேசியுள்ளார்.
ஹார்திக் பாண்டியா
ஹார்திக் பாண்டியாபடம் | AP
Published on
Updated on
2 min read

இந்திய அணியின் நீண்ட கால கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியுள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹார்திக் பாண்டியா, இந்திய அணியை 16 டி20 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளார். இருப்பினும், இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகம் சூர்யகுமார் யாதவை டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமித்தது. தற்போது அவர் அணியை கேப்டனாக வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.

இந்த நிலையில், உள்ளூர் போட்டிகளில் விளையாட எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறார், இந்திய அணித் தேர்வுக்குழுவில் ஏற்படும் மாற்றம் இவை இரண்டும் ஹார்திக் பாண்டியா நீண்ட காலத்துக்கு இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதற்கான தெரிவாக இருப்பாரா என்பதை முடிவு செய்யும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (கோப்புப் படம்)
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணித் தேர்வுக்குழுவில் மாற்றம் ஏற்பட்டால், இந்திய கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்படும். ஒவ்வொரு அணி நிர்வாகமும் தனித்தன்மை வாய்ந்தது. ஹார்திக் பாண்டியாவை பொருத்தவரையில், அவர் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாட வேண்டும். அவர் மிகவும் அரிதாக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடுகிறார். ஆனால், அவர் தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தொடங்கினால், அவர் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான இந்திய அணியின் நீண்டகால கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக நினைக்கிறேன்.

ஐசிசி நடத்தும் தொடர்களில் ஹார்திக் பாண்டியா எப்போதும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரை நிறைய பேர் நினைவில் வைத்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தொடரின்போது, இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக ஹார்திக் பாண்டியா செயல்பட்டார். அதிக அளவிலான ஓவர்கள் வீசும்போது, அதிகப்படியாக ஓட வேண்டியிருக்கும்.

டி20 போட்டிகளைக் காட்டிலும் ஒருநாள் போட்டிகளில் உள்ள அழுத்தம் வித்தியாசமானது. ஒருநாள் போட்டிகளில் ஆல்ரண்டர் வீரர் ஒருவர் 7 - 10 ஓவர்கள் வீச வேண்டியிருக்கும். அதன் பின், 5-வது அல்லது 6-வது வீரராக களமிறங்கி விளையாட வேண்டியிருக்கும். ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட உடல் உறுதி மிகவும் முக்கியம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com