2-வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவிக்காத இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை.
Captain Shubman gill with head coach Gautam gambhir
படம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 2) முதல் தொடங்குகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்திய அணி இன்னும் அதன் பிளேயிங் லெவனை அறிவிக்கவில்லை. முதல் டெஸ்ட்டில் விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

இரண்டாவது டெஸ்ட் குறித்து ஷுப்மன் கில்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

2-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பு ஷுப்மன் கில் பேசியதாவது: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படுவதற்கான தெரிவில் ஜஸ்பிரித் பும்ரா கண்டிப்பாக இருக்கிறார். 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் விதமான பிளேயிங் லெவனைத் தேர்வு செய்ய வேண்டும். அதிக ரன்கள் குவிக்கவும் வேண்டும்.

நாளை (ஜூலை 2) எந்த மாதிரியான அணியுடன் களமிறங்கவுள்ளோம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஆடுகளத்தின் தன்மையைப் பொருத்தே பிளேயிங் லெவனை தேர்வு செய்வோம். கூடுதல் பேட்டருடன் களமிறங்குவதைக் காட்டிலும், 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றும் விதமான பிளேயிங் லெவனுடன் களமிறங்க வேண்டும் என்றார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The Indian team is yet to announce its playing eleven for the second Test against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com