கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் அலெக்ஸ் கேரி..!

ஆஸி. விக்கெட் கீப்பரும் பேட்டருமான அலெக்ஸ் கேரி குறித்து...
Australia's Alex Carey plays a shot from a delivery of West Indies' Anderson Phillip
அலெக்ஸ் கேரி... படம்: ஏபி
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பரும் பேட்டருமான அலெக்ஸ் கேரி இந்தாண்டு சிறப்பாக விளையாடி வருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2021-ஆம் ஆண்டு டெஸ்ட்டில் அறிமுகமானார் அலெக்ஸ் கேரி.

33 வயதாகும் இவர் இதுவரை 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,959 ரன்கள் எடுத்துள்ளார். இவரது ஒட்டுமொத்த சராசரி 35.62-ஆக இருக்கிறது.

இந்நிலையில், 2025-இல் மட்டும் 60க்கும் அதிகமான சராசரியுடன் விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலிய அணியை பலமுறை இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் டெஸ்ட்டில் 8, 65 ரன்கள் எடுத்தார்.

தற்போது, இரண்டாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதுவரை 11 அரைசதங்கள், 2 சதங்கள் அடித்துள்ளார்.

  • 2021-இல் 097 ரன்கள் - சராசரி 19.40

  • 2022-இல் 536 ரன்கள் - சராசரி 48.72

  • 2023-இல் 461 ரன்கள் - சராசரி 24.26

  • 2024-இல் 440 ரன்கள் - சராசரி 33.84

  • 2025-இல் 425 ரன்கள் - சராசரி 60.71

தன்னுடைய கிரிக்கெட் வாழ்வில் சிறப்பான ஃபார்மில் இருக்கும் அலெக்ஸ் கேரிக்கு சமீபத்தில் ஆஸி. சாங் மாஸ்டர் என்ற பொறுப்பை நாதன் லயன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Summary

Australian wicketkeeper and batsman Alex Carey has been playing well this year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com