2-ஆவது டெஸ்ட்: அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டுகள், ஆஸி. 286-க்கு ஆல் அவுட்!

மே.இ.தீ. அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் ஆஸி. பேட்டிங் குறித்து...
Australia's Alex Carey celebrates with partner Beau Webster
அல்ஜாரி ஜோசப், கேரி, வெப்ஸ்டர். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் ஆஸி. முதல்நாள் முடிவில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கரிபியக் கடலில் அமைந்துள்ள கிரெனடா எனும் தீவில் இந்தப் போட்டி இந்திய நேரப்படி நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 3 மணி வரை நடைபெற்றது.

முதல்நாள் முடிவில் ஆஸி. அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மே.இ.தீ. அணி தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்க போதிய வெளிச்சமின்மை காரணத்தினால் 2-ஆம் நாளுக்கு என நடுவர்கள் தீர்மானித்தார்கள்.

இந்தப் போட்டியில் 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸி. அணியை கிரீன், ஹெட் 90 ரன்கள் வரை எடுத்துச் சென்றனர்.

இவர்கள் இருவரும் ஆட்டமிழக்க அடுத்ததாக பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி சிறப்பாக கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். இருவருமே அரைசதம் அடித்து அசத்தினார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை எடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டையும் இவர் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

1-0 என முன்னிலையில் இருக்கும் ஆஸி. பேட்டிங்கில் சொதப்பினாலும் 2-ஆம் கம்பேக் தருவார்களா எனப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Summary

Australia were all out for 286 runs at the end of the first day of the 2nd Test against the West Indies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com