30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து ஆஸி. ஆதிக்கம்!

டெஸ்ட்டில் ஃபிராங்க் வோரல் டிராபியை ஆஸி. தக்கவைத்துக்கொண்ட சாதனை குறித்து...
The captains of the Australia and West Indies teams with the Frank Worrall Trophy.
ஃபிராங்க் வோரல் கோப்பையுடன் ஆஸி. -மே.இ.தீ. கேப்டன்கள். படம்: எக்ஸ் / வின்டிஸ் கிரிக்கெட்.
Published on
Updated on
1 min read

ஆஸி. அணி 30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுடன் விளையாடும் டெஸ்ட் போட்டிக்கு ஃபிராங்க் வோரல் கோப்பை எனப் பெயரிடப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகள் 1960-61 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் விளையாடியபோது இந்தக் கோப்பை அறிமுகமானது.

முதல் போட்டி டிராவில் முடிந்தாலும் அந்தத் தொடரை ஆஸி. 2-1 என வென்றது.

இந்தக் கோப்பையில் கடைசியாக மேற்கிந்தியத் தீவுகள் 1993-இல் வென்றது.

பின்னர், தொடர்ச்சியாக ஆஸி. அணி இந்தக் கோப்பையை 30 ஆண்டுகளாகத் தன்னிடத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தொடர்ச்சியாக 14 முறை தொடரை இழக்காமல் வென்று சாதனை படைத்துள்ளது.

கடந்த கால வெற்றிகள்

1993 - மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி (2-1)

1995 - ஆஸ்திரேலியா வெற்றி (2-1)

1997 - ஆஸ்திரேலியா வெற்றி (3-2)

1999 - சமன் (2-2)

2001 - ஆஸ்திரேலியா வெற்றி (5-0)

2003 - ஆஸ்திரேலியா வெற்றி (3-1)

2006 - ஆஸ்திரேலியா வெற்றி (3-0)

2008 - ஆஸ்திரேலியா வெற்றி (2-0)

2010 - ஆஸ்திரேலியா வெற்றி (2-0)

2012 - ஆஸ்திரேலியா வெற்றி (2-0)

2015 - ஆஸ்திரேலியா வெற்றி (2-0)

2016 - ஆஸ்திரேலியா வெற்றி (2-0)

2023 - ஆஸ்திரேலியா வெற்றி (2-0)

2024 - சமன் (1-1)

2025 - ஆஸ்திரேலியா வெற்றி (2-0)

Summary

Australia extend their retention of the Frank Worrell Trophy to a 30th year. The West Indies last won a Test series against Australia back in 1993 down under

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com