ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்: 2 இளம் வீரர்கள் உள்பட 16 பேர் கொண்ட மே.இ.தீ. அணி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு 16 பேர் கொண்ட மே.இ.தீ. அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி 3-0 என டெஸ்ட் தொடரை வென்றது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெல்ல இருக்கிறது.
இந்தப் போட்டிகள் வரும் ஜூலை 20ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
இதற்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் 2 இளம் வீரர்கள் (ஜுவெல் ஆண்ட்ரிவ், ஜெடியா பிளேட்ஸ்) முதல்முறையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
ஜுவெல் ஆண்ட்ரிவ் பேட்டிங்கிற்கு புகழ்பெற்றவர், விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார். 18 வயதான இவர் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அற்புதமாக விளையாடியதால் தேர்வாகியுள்ளார்.
ஜெடியா பிளேட்ஸ் இடதுகை வேகப் பந்துவீச்சாளர். கடந்த டிசம்பரில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். அவருக்கு முதல்முறையாக டி20யில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி
ஷாய் ஹோப் (கேப்டன்), ஜுவெல் ஆண்ட்ரிவ், ஜெடியா பிளேட்ஸ், Shai Hope (C), ரோஷ்டன் சேஸ், மேத்திவ் ஃபோர்ட், ஷிம்ரன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹௌசைன், அல்ஜாரி ஜோசப், பிரண்டன் கிங், எவின் லெவிஸ், குடகேஷ் மோடி, ரோமன் பவல், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷெர்ஃபானே ரூதர்போர்டு மற்றும் ரொமாரியோ ஷெப்பர்டு.
ரஸ்ஸல் - முதலிரண்டு போட்டிகள் மட்டுமே விளையாடுவார். பின்னர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவிருக்கிறார்.
Two exciting newcomers have been included in the West Indies squad as they gear up to face Australia in a five-match T20I series from 20 July
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.