
இந்தியாவின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள ஸ்மிருதி மந்தனா மும்பையில் பிறந்தவர்.
இடதுகை பேட்டரான ஸ்மிருதி, 263 சர்வதேச போட்டிகளில் விளையாடி 9,112 ரன்கள் குவித்துள்ளார்.
இந்திய அளவில் 14 சதங்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.
ஆர்சிபி அணிக்காக முதல்முறையாக கோப்பையை வென்றுக்கொடுத்து அசத்தியதும் ஸ்மிருதி மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரசிகர்கள் இவரைச் செல்லமாக ‘இளவரசி’ என அழைப்பார்கள்.
இதனைக் குறிப்பிட்டு குஜராத் டைட்டன்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் சீட்டுக் கட்டில் இருக்கும் ராணியைப் போலவே போஸ்டர் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளது.
இந்திய ரசிகர்களும் நள்ளிரவில் இருந்தே ஸ்மிருதி மந்தனாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.