
சர்வதேச டி20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் 1000 ரன்களைக் கடந்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
1000 ரன்களைக் கடந்த ஹெட்மேயர், ஹோப்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது.
இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் 55 ரன்களும், ஷிம்ரன் ஹெட்மேயர் 38 ரன்களும் குவித்தனர். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக இருவரும் 1000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக இதுவரை 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சாய் ஹோப், 1050 ரன்கள் குவித்துள்ளார். அதில் 7 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 82 ஆகும்.
இதுவரை 65 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷிம்ரன் ஹெட்மேயர், 1021 ரன்கள் குவித்துள்ளார். அதில் 5 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 81 ஆகும்.
இதையும் படிக்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி விலகல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.