
இந்திய டெஸ்ட் அணியில் 318-ஆவது நபராக அறிமுகமாகியுள்ள இளம் வீரர் அன்ஷுல் கம்போஜ் (24 வயது) மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த அன்ஷுல் கம்போஜ் கடந்த 2022-இல் ரஞ்சி கோப்பையில் திரிபுரா அணிக்கு எதிராக அறிமுகமானார்.
ரஞ்சி போட்டியில் கேரள அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்தார்.
ரஞ்சி கோப்பை வரலாற்றில் இந்தமாதிரியான சாதனையை மூவர் மட்டுமே நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் 2024-இல் அறிமுகமானாலும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார்.
2025 சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்ததும் சிறப்பாக பந்துவீசி கவனம் ஈர்த்தார்.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருக்கிறது.
தற்போது, மான்செஸ்டரில் 4-ஆவது டெஸ்ட் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பௌலிங்கை தேர்வு செய்துள்ளது.
ரஞ்சியில் நன்றாக விளையாடிய ஒருவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது அரிதாகவே இருந்துவரும் நிலையில் இந்தத் தேர்வு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.