
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிஎஸ்கே நட்சத்திரம் டெவால்டு ப்ரீவிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது.
இந்தப் போட்டிகள் வரும் ஆக.10ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. இதில் பங்கேற்கும் தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
எய்டன் மார்கரம் டி20 அணிக்கும் டெம்பா பவுமா ஒருநாள் அணிக்கும் கேப்டாக செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட்டில் ஜிம்பாம்வே அணிக்கு எதிராக அறிமுகமான சுழல் பந்துவீச்சாளர் ப்ரீனிலான் சுப்ராயன் டி20 அணியில் அறிமுகமாகியுள்ளார்.
சிஎஸ்கே அணியில் அசத்திய டெவால்டு ப்ரீவிஸ்ஸும், லுகான் - ட்ரெ பிரிடோரியஸும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிறார்கள்.
டி20 போட்டிகள் ஆக.10, 12,16 ஆம் தேதிகளிலும் ஒருநாள் போட்டிகள் ஆக.19,22,24 ஆம் தேதியும் தொடங்குகின்றன.
கடைசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டியில் தோற்றது.
டி20 தொடருக்கான அணி: எய்டன் மார்கர்ம் (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்டு ப்ரீவிஸ், நந்த்ரே பர்கர், ஜியார்ஜ் லின்ட், க்வானே மபாகா, செனுரன் முத்துசாமி, லுங்கி நெகிடி, காபா பீட்டர், லுகான் - ட்ரெ பிரிடோரியஸ், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ப்ரீனிலான் சுப்ராயன், ரஸ்ஸி வான் டெர் டுஸ்சென்.
ஒருநாள் தொடருக்கான அணி: டெம்பா பவுமா, கார்பின் போஷ், மாத்திவ் பிரீட்ஜி, டெவால்டு ப்ரீவிஸ், நந்த்ரே பர்கர், டோனி டி ஜார்ஜி, எய்டன் மார்க்ரம், செனுரன் முத்துசாமி, கேசவ் மகாராஜா, வியான் முல்டர், லுங்கி நெகிடி, லுகான் - ட்ரெ பிரிடோரியஸ், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பிரெனலன் சுப்ராயன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.