
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால், இந்த முறை ஆசியக் கோப்பை டி20 வடிவில் நடத்தப்படவுள்ளது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபை, அபு தாபி) நடத்தப்படவுள்ளன. இந்தியாவுக்கான போட்டிகள் அனைத்தும் துபையில் நடைபெறவுள்ளன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்டு விளையாடும் அணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி துபையில் நடைபெறுகிறது. சூப்பர் 4 சுற்றில் வருகிற செப்டம்பர் 21 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இந்தியாவுக்கான போட்டிகள் விவரம்
செப்டம்பர் 10: இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம்
செப்டம்பர் 14: இந்தியா - பாகிஸ்தான்
செப்டம்பர் 19: இந்தியா - ஓமன்
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Asian Cricket Council President Mohsin Naqvi has announced that the Asia Cup cricket series will be held in the United Arab Emirates.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.