சாதனைகளுக்காக நான் விளையாடவில்லை: டிம் டேவிட்

டி20யில் உலக சாதனை படைத்தது குறித்து டிம் டேவிட் பேசியதாவது...
Tim David raises his helmet in joy after scoring a century.
சதமடித்த மகிழ்ச்சியில் ஹெல்மெட்டை உயர்த்தும் டிம் டேவிட். படம்: டிம் டேவிட்
Published on
Updated on
1 min read

டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர் தான் சாதனைகளை நிகழ்த்த விளையாடவில்லை எனக் கூறியது கவனம் ஈர்த்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீ. அணி 214/4 ரன்கள் குவிக்க, ஆஸி. 16.1 ஓவரில் 215/4 ரன்கள் எடுத்து தொடரை வென்றது.

இந்தப் போட்டியில் டிம் டேவிட் 16 பந்தில் அரைசதம், 37 பந்தில் சதம் அடித்து பல சாதனைகளை நிகழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்தப் போட்டிக்குப் பிறகு டிம் டேவிட் பேசியதாவது:

டாப் ஆர்டரில் விளையாட வேண்டுமென நினைக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றாக விளையாட நினைக்கிறேன்.

எனக்கு சிறியதாக உடல் உபாதைகள் இருந்தன. வீட்டில் ஓய்வெடுத்தது நன்றாக இருந்தது. சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைக்குமென அதிகமாக யோசிக்கவில்லை.

நான் சாதனைகளுக்காக விளையாடவில்லை. ஆஸ்திரேலிய அணிக்காக சதம் அடிப்பது என்பது எனக்கும் சிறுவயது கனவுதான்.

இந்த ஆடுகளம் நன்றாக இருந்தது. பவுண்ட்ரி எல்லைகளும் சிறியதாக இருந்தன. என்னுடைய அனுபவத்தை உபயோகித்து விளையாடினேன்.

எனது பவர் - ஹிட்டிங் பேட்டிங்கில் அதிகமாக பயிற்சி எடுத்திருக்கிறேன். இருப்பினும் நான் குறிப்பிட்ட ஏரியாக்களில் மட்டும் அடிக்கும் ஸ்ட்ரோக் மேக்கராகவே இருக்க விரும்புகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com