நியாய விலைக் கடையில் அனைத்து பொருட்களும் தரமாக கிடைக்கும் - வெங்கடரமணன்ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் பணியிட மாற்றம்!ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய அரசுக்கு நோட்டீஸ்!எச்.டி.எப்.சி. வங்கியின் ஊழியர்கள் எண்ணிக்கை கணிசமாக சரிவு!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!
/

கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் ஆட்டமிழப்பு; போட்டி டிரா ஆகுமா?

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்துள்ளது.

News image

கே.எல்.ராகுல், ஷுப்மன் கில்

Updated On :27 ஜூலை 2025, 6:04 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்தைக் காட்டிலும் 311 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் 0 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். கே.எல்.ராகுல் 90 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். அவர் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தின் கடைசி நாளான இன்று உணவு இடைவேளையின்போது, இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 0 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 88 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

India had scored 223 runs for the loss of 4 wickets at the lunch break in the second innings of the fourth Test against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.