
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஓவல் டெஸ்ட்டிலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
மான்செஸ்டர் டெஸ்ட்டில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி தோல்வி அடையாமல் சமனில் முடித்தது.
கடைசி டெஸ்ட்டாக ஓவல் டெஸ்ட் ஜூலை 31-இல் நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
பென் ஸ்டோக்ஸ் அதிகமான ஓவர்கள் பந்துவீசியதால் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆலி போப் கேப்டனாக செயல்படுகிறார். இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன்
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெதெல், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.