Tamil Nadu player Jagadeesan in training...
பயிற்சியில் தமிழக வீரர் ஜெகதீசன்... படங்கள்: பிசிசிஐ

ஓவல் டெஸ்ட்: பிளேயிங் லெவனில் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து...
Published on

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூரைச் சேர்ந்த என். ஜெகதீசன் (29 வயது) 52 முதல்தர போட்டிகளில் 3,373 ரன்கள் எடுத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணியில் விளையாடி இருக்கிறார். பேட்டிங்கில் நன்றாகவே முன்னேறியுள்ளார்.

கடந்த சீசனில் டிஎன்பிஎல் தொடரில் ஜெகதீசன் அதிரடியாக விளையாடினார்.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் 1-2 என இந்தியா பின் தங்கியிருக்கிறது.

கடைசி டெஸ்ட் ஓவல் திடலில் நாளை (ஜூலை 31) தொடங்குகிறது. இதில், பென் ஸ்டோக்ஸ் இல்லாதது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இந்திய அணியில் பும்ரா விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது. ரிஷப் பந்த் காயம் காரணமாக வெளியேறியதால் ஜெகதீசன் தேர்வாகியுள்ளார்.

ஏற்கெனவே, விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் இருப்பதால் பிளேயிங் லெவனில் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என நாளைதான் தெரியவரும்!

Tamil Nadu cricket fans are eagerly waiting to see if Tamil Nadu player Jagatheesan will get a chance in the final Test against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com