ரிங்கு சிங்குக்கும் சமாஜவாதி எம்.பி.க்கும் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா?

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கும் சமாஜவாதி எம்.பி. பிரியா சரோஜுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.
rinku singh
ரிங்கு சிங் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கும் சமாஜவாதி எம்.பி. பிரியா சரோஜுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக இளம் வீரர் ரிங்கு சிங் உருவெடுத்து வருகிறார். இந்திய அணிக்காக அவர் 2 ஒருநாள் மற்றும் 33 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரராக அவர் வலம் வருகிறார்.

ஜூன் 8-ல் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது?

வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங்குக்கும் சமாஜவாதி எம்.பி. பிரியா சரோஜுக்கும் வருகிற ஜூன் 8-ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை பிரியா சரோஜின் தந்தை டூஃபானி சரோஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர்கள் இருவரின் திருமணம் பராம்பரிய முறைப்படி வாராணசியில் உள்ள ஹோட்டல் தாஜில் இந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இவர்களது திருமணத்துக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரிங்கு சிங் - பிரியா சரோஜ் இருவரின் நிச்சயதார்த்தத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் மட்டும் கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

26 வயதாகும் பிரியா சரோஜ் சமாஜவாதி சார்பில் ஜான்பூரின் மச்சிலிசார் தொகுதிக்கு முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவரது தந்தை டூஃபானி சரோஜ் சமாஜவாதி கட்சியில் இரண்டு முறை எம்.பி.யாக இருந்துள்ளார்.

பிரியா சரோஜின் தந்தையின் நண்பரும், முன்னாள் கிரிக்கெட்டருமான ஒருவரின் மூலம் ரிங்கு சிங்குக்கு பிரியா சரோஜ் அறிமுகமாகியிருக்கிறார். அதன் பின், ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் இருவரும் கடந்த சில காலமாக நண்பர்களாக பழகி வந்ததுள்ளனர். பின்னர், அவர்களது நட்பு குடும்பத்தினரின் சம்மதத்துடனும் இந்த திருமண ஏற்பாடாக மாறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com