shubman gill
ஷுப்மன் கில் (கோப்புப் படம்)

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஷுப்மன் கில்லுக்கான தேர்வு: முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஷுப்மன் கில்லுக்கான தேர்வு என முன்னாள் அணித் தேர்வுக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
Published on

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஷுப்மன் கில்லுக்கான தேர்வு என முன்னாள் அணித் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட மிக முக்கியமான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.

ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ரிஷப் பந்த் அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் என்பதால், இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பும், ஷுப்மன் கில் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஷுப்மன் கில்லுக்கான தேர்வு

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அவருக்கான தேர்வு என முன்னாள் அணித் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கான தேர்வு. அந்த தேர்வுக்கு அவர் தயாராக இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஒரு வீரராகவும் அவர் சிறப்பாக செயல்படுவதற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு. அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

அவரால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடிந்தால், அவரது கேப்டன்சி தானாக வளர்ச்சியடையும். இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து சிறந்த முடிவை எதிர்பார்க்கிறேன். போட்டிகள் மிகவும் கடுமையாக இருக்கும். இந்திய அணி அதற்கு தயாராக இருக்கிறது என நினைக்கிறேன் என்றார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Open in App
Dinamani
www.dinamani.com