1,60,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன! ஆஷஸ் தொடக்க நாள் விற்பனை அமோகம்!

ஆஷஸ் தொடக்க நாள் டிக்கெட் விற்பனையைப் பற்றி...
பாட் கம்மின்ஸ் - பென் ஸ்டோக்ஸ்
பாட் கம்மின்ஸ் - பென் ஸ்டோக்ஸ்
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் தொடக்க நாள் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனையில் புதிய சாதனை நிகழ்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நவம்பர் 21 ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கும் இந்தப் போட்டி ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மைதானமான பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிக்காக, கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக அதிகமான டிக்கெட் விற்பனையை பதிவு செய்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் புதிய சாதனையப் படைத்துள்ளது.

இந்தப் போட்டிக்கான 1,60,000 டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய சில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

2017 - 2018 ஆண்டு ஆஷஸ் தொடரின் விற்பனையின் போது ஒரு நாளில் 1,11,741 டிக்கெட்டுகள் விற்கப்பட்ட முந்தைய சாதனையை, டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய ஐந்து மணி நேரத்திற்குள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறும்போது, “ஏற்கனவே டிக்கெட் வாங்காதவர்கள் இப்போதே டிக்கெட் வாங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இன்னும் சில நாள்களுக்கு அனைத்தும் தீர்ந்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

பொது டிக்கெட்டுகள் ஜூன் 13 முதல் விற்பனைக்கு வரும். ரசிகர்கள் தங்கள் இருக்கைகளை முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ள வலியுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஆர்சிபிக்கு ஆதரவா..? குஜராத் வந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com