ஆர்சிபிக்கு ஆதரவா..? குஜராத் வந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்!

குஜராத் வந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கைப் பற்றி...
குஜராத் வந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தி.
குஜராத் வந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தி.
Published on
Updated on
1 min read

பெங்களூரு - பஞ்சாப் இடையிலான இறுதிப் போட்டியைப் பார்க்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் குஜராத்துக்கு வருகை தந்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் திடலில் இன்றிரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

சரிசமமான பலம் வாய்ந்த மற்றும் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகள் மோதுவதால் இந்தப் போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

பெங்களூரு அணிக்கு ஆதரவளித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபிடிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் உள்ளிட்டோரும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில், பிரிட்டன் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக்கும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், “நான் பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன். எனது மனைவி அக்‌ஷதா மூர்த்தி பெங்களூருவைச் சேர்ந்தவர். எனது முழு ஆதரவும் ஆர்சிபிக்குதான். என்னிடம் விராட் கோலி வழங்கிய பேட் ஒன்றும் உள்ளது. இது என்னிடம் உள்ள விலை மதிப்புமிக்க பரிசுகளில் ஒன்று.

ஐபிஎல் கிரிக்கெட்டின் வடிவத்தையே மாற்றியுள்ளது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும், எல்லா இடங்களிலும், தங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஐபிஎல்லில் விளையாட விரும்புகிறார்கள்.

கடந்த வாரம் நான் எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜேக்கப் பெத்தேல் ஒரு அற்புதமாக விளையாடினார். ஐபிஎல் அவரை சிறந்த வீரராக மேம்படுத்தியுள்ளது” என்றார்.

இதையும் படிக்க: ஒட்டுமொத்த கர்நாடகமும் ஆர்சிபி பின்னால் நிற்கிறது: துணை முதல்வர் சிவக்குமார் வாழ்த்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com