2 ஏசிஎல் தசைகள் கிழிந்தும் 100 டெஸ்ட்டில் விளையாடிய புஜாரா..! ரோஹித் புகழாரம்!

இந்திய வீரர் புஜாரா குறித்து தன்னம்பிக்கையூட்டும் விஷயத்தைக் கூறிய ரோஹித் சர்மா...
Pujara.
புஜாராAP
Published on
Updated on
1 min read

இந்திய வீரர் புஜாராவுக்கு 2 ஏசிஎல் தசைகளும் கிழிந்தும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

குஜராத்தில் பிறந்த புஜாரா (37) 103 டெஸ்ட்டுகளில் விளையாடி 7,195 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 சதங்கள், 35 அரைசதங்கள், 3 இரட்டைச் சதங்களும் அடங்கும்.

இந்திய அணிக்காக 2010-இல் டெஸ்ட்டில் அறிமுகமான புஜாரா கடைசியாக 2023-இல் விளையாடினார்.

சமீபகாலமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கமால் இருக்கும் புஜாரா குறித்து முன்னாள் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

புஜாரா ஆட்டமிழக்கவே மாட்டார்

14 வயதில் திடலுக்குச் சென்று மாலை வரும்போது எனது முகத்தின் நிறம் மாறியிருக்கும். ஏனெனில், புஜாரா 2-3 நாள்கள் விக்கெட்டே விடாமல் ஆடிக்கொண்டிருப்பார். நாங்கள் வெயிலில் ஃபீல்டிங் செய்வது வழக்கமாகிவிடும்.

ஒருமுறை எனது அம்மாகூட இதைக் கேட்டார். ’நன்றாக இருக்கிறாய். கிரிக்கெட் விளையாடச் சென்ற ஒரு வாரத்தில் மாறிவிடுகிறாயே’ என்றார்.

அதற்கு நான், ‘என்ன செய்வது அம்மா, புஜாரா என்று ஒருவன் இருக்கிறான். 3 நாளுமே அவன் பேட்டிங் விளையாடுகிறான்’ என்றேன்.

இதுதான் எங்களுக்கு புஜாரா குறித்த முதல் அடையாளமாக இருந்தது.

இரண்டு ஏசிஎல் தசைகளும் கிழிந்தன

புஜாராவின் தொடக்க காலத்திலேயே அவரது இரண்டு ஏசிஎல் (முன்புற சிலுவை தசைநார்) தசைகளும் கிழிந்தன. அது மிகப்பெரிய மோசமான காயம்.

கிரிக்கெட்டர் மட்டுமல்லாமல் எந்த ஒரு விளையாட்டை விளையாடாவிட்டாலும் அப்படியே விட்டிருக்கலாம். ஆனால், ஒரு விளையாட்டு வீரராக இருந்து 2 ஏசிஎல் தசைகளும் கிழிவது மிகவும் கடினமானது.

புஜாரா ஓடும் தொழிநுட்பத்தை நாங்கள் கிண்டல் செய்திருக்கிறோம். ஆனால், அவர் 100 டெஸ்ட்டுகளை கடந்து விளையாடியுள்ளார். எப்படி இப்படி முடிந்தது? மொத்த பாராட்டும் அவருக்குதான்.

புஜாராவுக்கு கிரிக்கெட் மீதான அர்ப்பணிப்பும் ஆர்வமும் மிகுதியாக நிரம்பி இருக்கிறது எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com