
டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் அசத்திவரும் ஆஸி. நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது 42-ஆவது டெஸ்ட் அரைசதத்தினை நிறைவு செய்துள்ளார்.
லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் தெ.ஆ. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதல்நாளில் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளித்து ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே நிதானமாக விளையாடி வருகிறார்.
76 பந்துகளில் ஸ்டீவ் ஸ்மித் தனது அரைசத்தினை நிறைவு செய்தார்.
116 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் 10,000 ரன்களை இலங்கை டெஸ்ட்டில் கடந்தார்.
டெஸ்ட்டில் 36 சதங்களை அடித்துள்ள ஸ்மித் 42 அரைசதங்களையும் அடித்துள்ளார்.
ஆஸி. அணி 33 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்களை எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.