ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்!

ஆர்சிபி அணியை வாங்குவது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியதாவது...
RCB symbol, Virat kohli with deputy karnataka cm.
ஆர்சிபி இலச்சினை, விராட் கோலியுடன் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்.
Published on
Updated on
1 min read

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் “நான் ஏன் ஆர்சிபி அணியை வாங்கப் போகிறேன். நான் என்ன பைத்தியக்காரனா?” எனக் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் ஆர்சிபி இந்தாண்டு முதல்முறையாக கோப்பையை வென்றது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த உயிரிழப்பு விவகாரத்தில் ஆர்சிபி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளர், செயளாலர் ராஜிநாமா செய்தார்.

விராட் கோலி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து ஆர்சிபி அணியை விற்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதனை கர்நாடகத்தின் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வாங்குவதாக தகவல் வெளியாகியது. இது குறித்து அவர் பேசியதாவது:

நான் என்ன பைத்தியக்காரனா?

நான் பைத்தியக்காரன் இல்லை. எனது இள வயதில் இருந்தே நான் கார்நாடக கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளேன். அப்போதே இருந்தே எனக்கு அதில் பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டாலும் எனக்கு நேரம் இருந்ததில்லை.

எனது கல்வி நிறுவனத்தைக் கூட பார்த்துக்கொள்ள நேரமில்லாமல் எனது குடும்பத்தினருக்கு மாற்றிவிட்டு நான் ராஜிநாமா செய்துவிட்டேன்.

எனக்கு ஏன் ஆர்சிபி தேவைப்படுகிறது? நான் ராயல் சேலஞ்சஸ் மதுவைக் கூட குடித்ததில்லை என்றார்.

ஆர்சிபி அணியின் மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர் (ரூ. 8,600 கோடி) இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com