ஸ்டார்க் அரைசதம்: டபிள்யூடிசியை வெல்ல தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்கு!

டபிள்யூடிசியை வெல்ல தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Australia's Mitchell Starc plays a shot on day three of the World Test Championship final between South Africa and Australia at Lord's cricket ground in London
மிட்செல் ஸ்டார்க் பேட்டிங். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

டபிள்யூடிசியை வெல்ல தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் நடைபெற்று வரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸி. அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212க்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸி. அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் அரைசதம் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் (58*) இருந்தார்.

பந்துவீச்சாளரான ஸ்டார்க்கின் 11-ஆவது அரைசதம் மிகவும் முக்கியமான கட்டத்தில் வந்திருக்கிறது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் ககிசோ ராபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நிகிடி 3, யான்சென், முல்டர், மார்கரம் தலா 1 விக்கெட்டும் எடுத்து உதவினார்கள்.

நடப்பு சாம்பியனான ஆஸி. 281 ரன்களுக்கும் தெ.ஆ. அணியை வீழ்த்த முயற்சிக்கும்.

டெஸ்ட்டில் 250க்கும் அதிகமான ரன்களை எளிதாக சேஸ் செய்திருக்கும் தெ.ஆ. அணிக்கு இந்தப் போட்டியிலும் அதை செய்து முடிக்க முடியுமா என ரசிகர்கள் காத்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com