வங்கதேச அணிக்கு புதிய கேப்டன்; அணியின் நலனை பாதிக்குமா?

வங்கதேச அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளது அந்த அணியின் நலனை பாதிக்குமா என்பது குறித்து...
வங்கதேச அணிக்கு புதிய கேப்டன்; அணியின் நலனை பாதிக்குமா?
படம் | ஐசிசி
Published on
Updated on
1 min read

ஒருநாள் போட்டிகளுக்கான வங்கதேச அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நஜ்முல் ஹொசைன் ஷாண்டோவுக்குப் பதிலாக, புதிய கேப்டனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக மெஹிதி ஹாசன் மிராஸ் செயல்படுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் நேற்று (ஜூன் 12) அறிவித்தது. மெஹிதி ஹாசன் மிராஸ் அடுத்த ஓராண்டுக்கு அணியின் கேப்டனாக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் நலனை பாதிக்குமா?

ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனை நியமித்துள்ள நிலையில், கேப்டன் பொறுப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் அணியின் நலனை பாதிக்காது என புதிதாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மெஹிதி ஹாசன் மிராஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியின் கேப்டனை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. அணிக்கான கேப்டனை தேர்ந்தெடுப்பது கிரிக்கெட் வாரியக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கேப்டன் பொறுப்பு தொடர்பாக தனிப்பட்ட நபரால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நேற்று என்னை தொலையில் அழைத்துப் பேசினார். அவர்கள் எனக்கு கேப்டன் பொறுப்பை வழங்க உள்ளதாகவும், அவர்களுக்கு அதிக நேரமில்லை எனவும் கூறினார்.

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஒருநாள் போட்டிகளில் நன்றாக விளையாடி வருகிறார். ஆனால், கேப்டன் பொறுப்பில் மாற்றத்தைக் கொண்டு வருவது கிரிக்கெட் வாரியத்தின் முடிவு. கேப்டன் பொறுப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் அணியின் நலனை பாதிக்கும் என நான் நினைக்கவில்லை. நாங்கள் அனைவரும் நாட்டுக்காக விளையாடுகிறோம். கேப்டன் பொறுப்பு மாற்றம் என்னையோ, ஷாண்டோவையோ பாதிக்காது. அவர் கேப்டனாக செயல்பட்டபோது, அவருக்கு நிறைய உதவியுள்ளேன். நான் கேப்டனாக செயல்படும்போது, எனக்கு அவர் உதவி செய்வார். நாங்கள் கிரிக்கெட்டில் வங்கதேசத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம் என்றார்.

27 வயதாகும் மெஹிதி ஹாசன் மிராஸ் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து அணியைக் கேப்டனாக வழிநடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com