தென்னாப்பிரிக்க டாப் ஆர்டர் ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: ரிக்கி பாண்டிங்
படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

தென்னாப்பிரிக்க டாப் ஆர்டர் ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: ரிக்கி பாண்டிங்

தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
Published on

தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணிக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாப் ஆர்டர் அழுத்தம் கொடுக்க வேண்டும்

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை பொருத்தவரை ஒரு விஷயம் எனக்கு நன்றாக தெரியும். உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது, அணியின் டாப் ஆர்டர் சிறப்பாக செயல்பட வேண்டும். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கவில்லையென்றால், அணியின் ஸ்கோர் நகராது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com