இந்திய அணிக்காக விளையாட ஊக்கமளித்தவர் வாஷிங்டன் சுந்தர்; மனம் திறந்த சாய் சுதர்சன்!

இந்திய அணிக்காக விளையாட ஊக்கமளித்தவர் வாஷிங்டன் சுந்தர் என சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.
washington sundar and sai sudharsan
வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன்படம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

இந்திய அணிக்காக விளையாட ஊக்கமளித்தவர் வாஷிங்டன் சுந்தர் என சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான சாய் சுதர்சனும் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகவுள்ளார்.

இந்த நிலையில், இந்திய அணிக்காக விளையாட தனக்கு வாஷிங்டன் சுந்தர் ஊக்கமளித்தாக சாய் சுதர்சன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ-ல் சாய் சுதர்சன் பேசியதாவது: வாஷிங்டன் சுந்தருக்கு எதிராக சில போட்டிகளில் நான் விளையாடியுள்ளேன். அவருக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சிறப்பானதாக இருக்கும். ஜூனியர்களான நாங்கள் பலரும் அவரைப் பார்த்து வளர்ந்து வருகிறோம். சிறப்பாக விளையாடி இளம் வயதில் இந்திய அணியில் இடம்பிடித்த அவரைப் போன்று நானும் இந்திய அணியில் இடம்பிடிக்க விரும்பினேன்.

வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடினார். அதன் பின், அவர் இந்திய அணிக்காக விளையாடினார். சென்னையைச் சேர்ந்த ஒருவர் இந்திய அணிக்காக விளையாடுகிறார் என்பது மிகவும் ஊக்கமளித்தது. வாஷிங்டன் சுந்தரை எனக்கு இளம் வயதிலிருந்தே தெரியும். அதுவே அவரைப் போன்று நானும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. அவர் எனக்கு மிகவும் ஊக்கமளிப்பவராக உள்ளார் என்றார்.

வாஷிங்டன் சுந்தர் இதுவரை இந்திய அணிக்காக 9 டெஸ்ட், 23 ஒருநாள் மற்றும் 54 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 19-வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் சுந்தருக்கு 18 வயதில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு அவரது 20 வயதில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அப்போது, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றுவதற்கு வாஷிங்டன் சுந்தரின் சிறப்பான பங்களிப்பும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com