இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டி லீட்ஸில் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டி ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: லீட்ஸில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெற வேண்டும். அவருடன் கண்டிப்பாக ரவீந்திர ஜடேஜாவும் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும். இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க வேண்டும். ஆடுகளத்தின் தன்மை மாறினால், குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள். ஆடுகளத்தின் தன்மையில் மாற்றம் இல்லாவிட்டாலும், விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் இவர்களுக்கு உள்ளது. எந்த ஒரு ஆடுகளத்திலும் இவர்களால் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியும் என்றார்.
கடந்த 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றதே கிடையாது. இந்த வரலாற்றை ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி மாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.