இங்கிலாந்தில் ஜெய்ஸ்வால் வெற்றிகரமாக செயல்படுவார்: அஜிங்க்யா ரஹானே

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்படுவார் என அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
India's Yashasvi Jaiswal bats on day one of the first cricket test match between England and India
யஷஸ்வி ஜெய்ஸ்வால்படம் | AP
Published on
Updated on
1 min read

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்படுவார் என அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் இன்று (ஜூன் 20) தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

ஜெய்ஸ்வாலுக்கு ரஹானே ஆதரவு

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்படுவார் என அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தனிப்பட்ட முறையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். ஏனெனில், இங்கிலாந்தில் தொடக்க ஆட்டக்காரர் நன்றாக விளையாடுவது மிகவும் முக்கியம். யஷஸ்வி ஜெய்ஸ்வாலால் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கவும் முடியும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்படவும் முடியும். அதனால், இங்கிலாந்தில் ஜெய்ஸ்வால் எப்படி செயல்படப் போகிறார் என்பதை மிகவும் ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com