எம்பிஎல்: ரன் ஓடும்போது இடித்துக்கொண்ட பேட்டர்கள், இருவருமே ரன் அவுட் ஆகாத அதிர்ஷ்ட நிகழ்வு!

மகாராஷ்டிர பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட்டில் தவறவிட்ட ரன் அவுட் குறித்து...
The batters were knocked out while running, and it was a lucky coincidence that neither of them were run out! MPLT20
இடித்துக்கொண்ட பேட்டர்கள், இருவருமே ரன் அவுட் ஆகாமல் தப்பித்த காட்சிகள். படங்கள்: எக்ஸ் / எம்பிஎல் டி20
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் இரு வீரர்களும் பாதியில் இடித்துக்கொண்டு கீழே விழுந்து, இருவரும் ரன் அவுட் ஆகாமல் தப்பித்த விடியோ வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிர டி20 கிரிக்கெட் எலிமினேட்டர் போட்டியில் ரெய்காட் ராயல்ஸ் கோலாப்பூர் டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் நேற்றிரவு (ஜூன் 20) மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த கோலாப்பூர் டஸ்கர்ஸ் 164/7 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ரெய்காட் ராயல்ஸ் 19.4 ஓவரில் 165/4 ரன்கள் எடுத்து வென்றது.

அதிகபட்சமாக விக்கி ஓஸ்ட்வல் 74 ரன்கள் குவித்தார். இவரது ரன் அவுட்டைதான் கோலாப்பூர் அணி தவறவிட்டது. இறுதியில் அவர்தான் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்தப் போட்டியில் நடந்த ரன் அவுட் விடியோவை மகாராஷ்டிர பிரீமியர் லீக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் இந்த நிகழ்வு எத்தனையாவது ஓவரில் நடந்தது என்பதைக் குறிப்பிடவில்லை.

ரெய்காட் ராயல்ஸ் அணியில் விக்கி ஓஸ்ட்வல் அடித்த பந்தில் 2 ஆவது ரன் ஓடும்போது உடன் விளையாடியவருடன் நடு ஃபிட்சில் மோதிக் கொண்டார்.

ஃபீல்டர் கீப்பரிடம் தூக்கிவீசிய பந்தினை கீப்பர் ரன் அவுட் செய்யாமல் எதிர் திசையில் பந்துவீச்சாளரிடம் வீசுவார். ஆனால், அந்தப் பந்தினை சரியாக பிடிக்காத கோலாப்பூர் டஸ்கர்ஸ் அணி வீரர் ரன் அவுட் வாய்ப்பை தவறவிடுவார்.

அடுத்ததாக ஸ்டிரைக்கர் இருக்குமிடத்தில் ரன் அவுட் செய்ய வாய்ப்பிருந்தது. கீழே விழுந்த பேட்டர் எழுந்து ஓடி கையாலே கிரீஸை தொடுவார். கோலாப்பூர் டஸ்கர்ஸ் அணியினர் அந்த ரன் அவுட் வாய்ப்பையும் தவறவிட்டனர்.

இந்த எளிய ரன் அவுட்டை இழந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com